Home நாடு பிரபல பாடகி ஷரிஃபா ஆயினி காலமானார்!

பிரபல பாடகி ஷரிஃபா ஆயினி காலமானார்!

535
0
SHARE
Ad

Sharifah Ainiகோலாலம்பூர், ஜூலை 5 – ஒரு காலத்தில் மலேசிய இசை உலகில் முன்னணி பாடகியாகவும,  மலாய் ரசிகர்களிடையே கனவுக் கன்னியாகவும் திகழ்ந்து வந்த பிரபல பாடகி ஷரிஃபா ஆயினி நுரையீரல் நோய் காரணமாக நேற்று காலமானார்.

பெட்டாலிங் ஜெயா, டாமன்சாரா நிபுணத்துவ மருத்துவமனையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் அவர் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 61 வயதான ஷரிஃபா ஆயினி கடந்த 2 ஆண்டுகளாக தனது நுரையீரல் நோயுடன் போராடி வந்துள்ளார்.

மலேசிய இசை உலகில் 1969 -ஆம் ஆண்டு நுழைந்த அவர் மலேசிய தொலைக்காட்சிகளில் பிரபல பாடகியாகவும் மேடை நிகழ்ச்சிகளில் அதிகமான ரசிகர்களை ஈர்க்கும் நட்சத்திரமாகவும் விளங்கி வந்தார்.

#TamilSchoolmychoice

பல மலாய் படங்களிலும் அவர் நடித்திருக்கின்றார். அவரது கலையுலக சேவைக்காக அவருக்கு அரசாங்கத்தின் உயரிய கலைச் சேவை விருதுகள் வழங்கப்பட்டுள்ளதோடு 2003 ஆம் ஆண்டு மத்திய அரசாங்கத்தால் டத்தோ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.