Home கலை உலகம் சென்னையில் மலேசியப் படமான ‘மைந்தன்’ இசை வெளியீடு!

சென்னையில் மலேசியப் படமான ‘மைந்தன்’ இசை வெளியீடு!

723
0
SHARE
Ad

Maindhan

சென்னை, ஜூலை 5 – மலேசியாவின் பிரபல நடிகர் மற்றும் இயக்குநரான சி.குமரேசன் கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகி இருக்கும் மைந்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை வடபழனி பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

நாட்டின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ, இந்த திரைப்படத்தை திரையரங்குகளின் வாயிலாக மக்களிடையே கொண்டு சேர்க்கவும், சென்னையில் நடைபெற்ற இந்த இசை வெளியீட்டை ஏற்று நடத்தவும் உதவியது.

#TamilSchoolmychoice

முற்றிலும் மலேசியக் கலைஞர்களின் உழைப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் புன்னகைப்பூ கீதா, ஷைலா நாயர், ராப் இசை பாடகர் சீஸே, ரேபிட் மேக், டிஹெச்ஆர் உதயா, புகழ்பெற்ற பாடகர் டார்க்கி ஆகியோர் பங்குபெற்றுள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு மனீஸ் சிங் இசையமைத்துள்ளார். டேவ் நேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ப்ரேம் நாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி கதாநாயகர்கள் ஸ்ரீகாந்த், விமல், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், சமுத்திரக்கனி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இசை வெளியீட்டு விழாவின் காணொளியை கீழ் உள்ள யூடியூப் இணைப்பில் காணலாம்:-

– ஃபீனிக்ஸ்தாசன்