Home அவசியம் படிக்க வேண்டியவை ‘மைந்தன்’ இசை வெளியீடு: “இயக்குநர் குமரேசன் மிரட்டியிருக்கிறார்” – சமுத்திரக்கனி வாழ்த்து

‘மைந்தன்’ இசை வெளியீடு: “இயக்குநர் குமரேசன் மிரட்டியிருக்கிறார்” – சமுத்திரக்கனி வாழ்த்து

643
0
SHARE
Ad

Mainthan (2)சென்னை, ஜூலை 5 – மலேசியாவின் பிரபல நடிகர் மற்றும் இயக்குநரான சி.குமரேசன் கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகி இருக்கும் மைந்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை வடபழனி பிரசாத் ஸ்டுடியோவில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னனி நடிகர்களான ஸ்ரீகாந்த், விமல் மற்றும் இயக்குநர்கள் சமுத்திரகனி, எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் பங்கேற்று உறையாற்றினார்கள்.

இதில் நடிகர் ஸ்ரீகாந்த் கூறியதாவது, “மலேசிய படமான ‘மைந்தன்’ இசை வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.மலேசிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்,மற்றும் நடிகர்கள்  மிகவும் திறமையானவர்கள்.அவர்கள் பழகுவதற்கும் மிகவும் அன்பானவர்கள்” என்று ஸ்ரீகாந்த் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், “மலேசிய கலைஞர்கள் எடுக்கும் அனைத்து படங்களும் வெற்றியடையவும்,  மலேசிய படமான இந்த ‘மைந்தன்’ திரைப்படமும் வெற்றி பெறவேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என நடிகர் ஸ்ரீகாந்த் கூறினார்.

இயக்குநர் சமுத்திரக்கனி பேசுகையில், “இப்படத்தின் இயக்குநர் குமரேசனை மலேசியாவில் தொலைக்காட்சியில் பார்த்து விட்டு, அவரை எனது படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறினேன். ஆனால் இப்போது அதற்கான அவசியமே இல்லாத அளவிற்கு ஒரு இயக்குநராக படத்தில் மிரட்டி இருக்கிறார். படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும், இவ்விழாவில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், விமல் ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டு மைந்தன் குழுவினருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

இசை வெளியீட்டு விழாவின் காணொளியை கீழ் உள்ள யூடியூப் இணைப்பில் காணலாம்:-