Home இந்தியா மோடி அரசின் முதல் பட்ஜெட் தொடர் இன்று தொடக்கம்!

மோடி அரசின் முதல் பட்ஜெட் தொடர் இன்று தொடக்கம்!

459
0
SHARE
Ad

People stand in front of the Indian parliament building on the opening day of the winter session in New Delhiபுதுடெல்லி, ஜூலை 7 – பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் விலைவாசி உயர்வு, நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவி உட்பட பல பிரச்சனைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

முந்தைய ஐ.மு கூட்டணி அரசு கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டின் காலம் இம்மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக புதிய அரசு பொது பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.

IN02_PARLIAMENT_300669fஇந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா ரயில்வே பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் பொருளாதார ஆய்வறிக்கையையும்,10-ஆம் தேதி பொதுபட்ஜெட்டையும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்கிறார்.

Prime Minister of India, Narendra Modi after attending the all party meeting in New Delhi.பட்ஜெட்டுக்கு முன்பே ரயில் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு விட்டன. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ள பிரச்சனை, நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவி பிரச்சனை ஆகியவற்றை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

எந்த பிரச்சனை குறித்தும் விவாதிக்க தயார் எனவும், இதற்கு எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

Prime Minister of India, Narendra Modi after attending the all party meeting in New Delhi.நாடாளுமன்ற அவையில் பின்னால் அமர்ந்திருக்கும் உறுப்பினர்கள் பேசுவதை, முன் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் பார்க்கும் வகையில், பெரிய ஒளித்திரைகள் தற்போது பொருத்தப்பட்டுள்ளன.