Home அவசியம் படிக்க வேண்டியவை விமானம் காலதாமதம்: பயணிகளுக்கு சொந்த செலவில் பீட்சா விருந்து கொடுத்த விமானி!

விமானம் காலதாமதம்: பயணிகளுக்கு சொந்த செலவில் பீட்சா விருந்து கொடுத்த விமானி!

523
0
SHARE
Ad

flight1வாஷிங்டன், ஜூலை 10 – அமெரிக்காவில் உள்ள மலிவு விலை விமானமான ஃபிரன்டியர் (Frontier) 719 விமானம், கடந்த திங்களன்று அந்நாட்டு நேரப்படி மாலை 7.40-க்கு, வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திலிருந்து கொலராடோ நாட்டின் தலைநகரமான டென்வெர் நோக்கி பயணமானது.

மேசமான வானிலை மற்றும் விமானத்தின் எரிவாயு சக்தி குறைந்துக் காணப்பட்டதால், அமெரிக்காவில் அமைந்திருக்கும் தெற்கு நெப்ராஸ்காவில் (Nebraska) விமானம் வேகமாக தரையிறங்கியது.

160 பயணிகளை ஏற்றிச் சென்ற அவ்விமானத்தை பெயர் குறிப்பிட விரும்பாத தலைமை விமானி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

#TamilSchoolmychoice

அதிக வெப்பம் மற்றும் பசியின் கொடுமையால் வாடியிருந்த பயணிகளிடம் “அன்பிற்குரிய பயணிகளே! ஃபிரன்டியர் விமான நிறுவனம் அமெரிக்காவின் மலிவு விலை விமானம்தான், ஆனால் அதன் தலைமை விமானியான நான் மலிவானவன் அல்ல. இப்போதுதான் உங்கள் அனைவருக்கும் பீட்சா கொண்டுவர செல்லியிருக்கிறேன்” என விமானி கூறியதாக அவ்விமானத்தில் பயணம் செய்த பயனிகளுள் ஒருவரான லோகன் மேரி டொரேஸ் (Logan Marie Torres) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், விமானி டொமினோ பீட்சாவை தொடர்பு கொண்டு 160 பீட்சாக்களை விமானத்திற்கு அனுப்பி வைக்க சென்னதாக அந்த பீட்ஸா கடையின் முதலாளி ஆண்டிரியூ ரிட்சி (Andrew Ritchie) செய்தியாளர்களிடம் கூறினார்.

“அப்போது மணி 10 ஆகிவிட்டதால் என் பணியாளர்கள் அனைவரும் வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல தயாராக இருந்தனர். ஆனால், இந்த ஆர்டர் வந்தவுடன் நான் அவர்கள் அனைவரையும் அழைத்து அரை மணி நேரத்திற்குள் 160 பீட்சா தயாராக வேண்டும் என்றேன்.

அதற்கு, அவர்கள் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இதனை சவாலாக எடுத்துக் கொண்டு பீட்சா செய்வதில் மும்முரமாக ஈடுபட்டனர். முதலில், நாங்கள் இதற்கு முன்னே தயார்படுத்தி வைத்திருந்த 35 பீட்சாக்களை விமான பணியாளர்களிடம் கொடுத்து வருமாறு எனது ஊழியர்களை அனுப்பினேன். பிறகு, நாங்கள் அனைவரும் மிக உற்சாகமாக அரை மணி நேரத்திற்குள் அனைத்து பீட்சாக்களையும் செய்து முடித்தோம்” என ரிட்சி கூறியுள்ளார்.

பிறகு, அந்நாட்டு நேரப்படி இரவு 10.30க்கு விமானம் தெற்கு நெப்ராஸ்காவிலிருந்து டென்வெரை நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தது. சுமார், 5 மணி நேர தாமதத்திற்கு பின்பு ஃபிரன்டியர் விமானம் டென்வரை வெற்றிகரமாகச் சென்றடைந்தது.