ஸ்தான்புல், ஜனவரி 7 – மோசமான பாதுகாப்பு நிலைமை காரணமாக லிபியாவுக்கான அனைத்து விமான சேவைகளையும் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது.
லிபியாவை ஆட்சி செய்த சர்வாதிகாரி முவம்பர் கடாபிக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுவடைந்தது. அதேசமயம் லிபியா ராணுவத்திற்கு எதிராக நேட்டோ படையினரும் சரமாரியாக தாக்குதல் நடத்தின.
பல நாட்கள் நடந்த இந்த தாக்குதலில் கடாபி கொல்லப்பட்டார். அதன்பின்னர் புதிய அரசு அமைந்தபோதும், அங்கு ஆயுத மோதல்கள் நீடிப்பதால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.
இதனால், லிபியாவின் முக்கிய நகரங்களான திரிபோலி, பெங்காசி, சேபா ஆகிய நகரங்களுக்கான விமானங்களை படிப்படியாக ரத்து செய்த துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனம், கடைசியாக மிஸ்ரட்டாவுக்கான விமானங்களையும் ரத்து செய்துள்ளது.
இதன்மூலம் லிபியாவுக்கான அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.