இதையடுத்து தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 22 வருடங்கள் சிறையில் இருக்கின்றனர். மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரின் வாழ்க்கையும் சினிமா படமாகிறது. இதற்கு வாய்மை என பெயரிட்டுள்ளனர்.
பேரறிவாளன் விடுதலைக்காக போராடும் அவரது தாயார் அற்புதம் அம்மாள் வேடத்தில் பூர்ணிமா பாக்யராஜ் நடிக்கிறார். கவுண்டமணியும் முக்கிய கடாபத்திரத்தில் வருகிறார். இப்படத்தை செந்தில்குமார் இயக்குகிறார்.
இதில் அரசியல் இருக்காது. ராஜீவ் படுகொலை பற்றிய காட்சியும் இருக்காது. மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கும் வேட்த்தில் கவுண்டமணி வருகிறார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா அற்புதம்மாள் முன்னிலையில் நடைபெறும் என செந்தில்குமார் கூறினார்.