Home Featured தமிழ் நாடு தந்தை இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ராஜீவ் கொலைக் குற்றவாளி நளினிக்கு அனுமதி!

தந்தை இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ராஜீவ் கொலைக் குற்றவாளி நளினிக்கு அனுமதி!

941
0
SHARE
Ad

nalini-rajiv gandhi accusedசென்னை – முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் நீண்ட காலமாக இருந்து வரும் நளினியின் தந்தை சங்கர நாராயணன் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு சென்னை கோட்டூர்புரத்தில் புதன்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றது.

அந்த இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள நளினிக்கு (படம்) பரோலில் அனுமதி வழங்கப்படுகின்றது.

வேலூர் சிறையில் தற்போது நளினி சிறைவாசத்தை அனுபவித்து வருகின்றார்.