Home Featured நாடு 1எம்டிபி விசாரணை: தம் பதவிக்காலம் முன்பே நிறைவு பெறும் – பேங்க் நெகாரா ஆளுநர் சேத்தி...

1எம்டிபி விசாரணை: தம் பதவிக்காலம் முன்பே நிறைவு பெறும் – பேங்க் நெகாரா ஆளுநர் சேத்தி நம்பிக்கை

626
0
SHARE
Ad

கோலாலம்பூர்- 1எம்டிபி விவகாரம் தொடர்பான விசாரணையானது தமது பதவிக்காலம் முடிவடையும் முன்பே நிறைவடையும் என தாம் நம்புவதாக பேங்க் நெகாரா ஆளுநர் டான்ஸ்ரீ டாக்டர் சேத்தி அக்தார் அசிஸ் தெரிவித்துள்ளார். வரும் மார்ச் மாத இறுதியில் அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது.

Zeti“1எம்டிபி விவகாரம் தொடர்பில் நான் இத்தகைய முயற்சியைத் தான் மேற்கொண்டுள்ளேன். இதைத்தான் பலமுறை சுட்டிக் காட்டியும் உள்ளேன். எனது பதவிக்காலம் முடியும் முன்னரே 1எம்டிபி விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறேன். இதன் மூலம் அடுத்து பதவியேற்கும் ஆளுநருக்கு தெளிவை ஏற்படுத்த முடியும்” என்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார் சேத்தி.

ஆளுநர் பதவிக்காலம் முடியும் முன்பே 1எம்டிபி தொடர்பான விசாரணைகள் முடிவடையும் எனும் நம்பிக்கை உள்ளதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த 2000ஆம் ஆண்டு மே மாதத்தில் பேங்க் நெகாரா ஆளுநராக நியமிக்கப்பட்டார் சேத்தி. இதன்மூலம் மலேசியாவில் இப்பதவியை வகித்த முதல் பெண்மணி எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ள அவர், கடந்த 2009ஆம் ஆண்டு அனைத்துலக அளவில் செயல்பட்டு வரும் பல்வேறு மத்திய வங்கித் தலைவர்களில் மிகச் சிறந்தவர் எனும் விருதை குளோபல் ஃபைனான்ஸ் பத்திரிகையிடமிருந்து பெற்றுள்ளார்.

மீண்டும் ஒரு தவணை பேங்க் நெகாரா ஆளுநராகத், தாம் பதவி வகிக்கப் போவதில்லை என சேத்தி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.