Home Featured நாடு ஒற்றுமையே நாட்டை முன்னேற்றும் – ஜோகூர் சுல்தான் வலியுறுத்து!

ஒற்றுமையே நாட்டை முன்னேற்றும் – ஜோகூர் சுல்தான் வலியுறுத்து!

654
0
SHARE
Ad

Johor Sultanஜோகூர் – மக்கள் ஒற்றுமையாக இல்லையெனில் எந்தவொரு நாடும் முன்னேற்றம் காணாது என ஜோகூர் சுல்தான் தெரிவித்துள்ளார்.

ஜோகூர் மாநில மக்கள் ஒற்றுமையைக் கட்டிக்காக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், அப்போதுதான் வளர்ந்த மற்றும் அமைதியான மாநிலமாக அம்மாநிலம் முன்னேற்றப் பாதையில் செல்லும் எனக் கூறியுள்ளார்.

“நம்மைச் சுற்றியுள்ள மக்களை நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகப் பார்க்கும்போதும் கருதும் போதும், தேவையற்ற பொறாமையும் எதிரி மனப்பான்மையும் எழ வாய்ப்பில்லை. மாறாக அவர்கள்  மீது அன்பும் பரஸ்பர மரியாதையும் தான் தோன்றும்.”

#TamilSchoolmychoice

“எனவே மதம் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பான வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாது ஜோகூர் மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் ஒருக்கிணைந்தும் செயல்பட வேண்டும். அப்போது தான் இம்மாநிலத்தின் வளத்தை உறுதி செய்ய முடியும்” என ஜோகூர் சுல்தான் வலியுறுத்தியுள்ளார்.

சாப் கோஹ் மெஹ் (CHAP GOH MEH) விழாவைக் கொண்டாடும் வகையில், பொன்டைன் அரங்கில், திங்கட்கிழமை இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்து நிகழ்வில் கலந்து கொண்டு பேசியபோதே சுல்தான் இவ்வாறு கூறினார்.