சென்னை, ஏப்ரல் 25 – ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ‘‘பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். ராஜீவ் கொலையாளிகள் 7 பேரின் விடுதலை தொடர்பாக 7 விதமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
இதனால் 7 பேரின் விடுதலையும் தாமதமாகியுள்ளது. 7 பேரின் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று எப்படியும் சாதகமாகத்தான் தீர்ப்பு வரும் என்கிற எதிர்பார்ப்பில் உலக தமிழர்கள் அணைவரும் காத்திருந்தனர். உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கேட்டதும் அதிர்ச்சியடைந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் பிறப்பித்த உத்தரவுக்கு பின்னர், தமிழக முதலமைச்சர் 7 பேரையும் விடுவிப்பதாக அறிவித்தார். ஆனால் இந்த வழக்கை மேல் முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம், அரசியல் சாசன அமர்வுக்கு விடுதலை வழக்கு மாற்றப்பட்டது என தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பு விடுதலை வழக்கில் தடையை ஏற்படுத்துவது போல, எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் எதிர்பாராத திருப்பமாக அமைந்துள்ளது என உலக தமிழர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.