Home உலகம் அர்ஜெண்டினாவுடன் ரஷ்யா புதிய அணுசக்தி ஒப்பந்தம்!  

அர்ஜெண்டினாவுடன் ரஷ்யா புதிய அணுசக்தி ஒப்பந்தம்!  

675
0
SHARE
Ad

flag+of+brazil.jpgபியூனஸ் அயர்ஸ், ஜூலை 14 – அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக செயல்படும் நிலையில் உலக அளவில் தனது நட்பு வட்டாரத்தை பெரிதாக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்கியுள்ளது.

அதன் முன்னோட்டமாக லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அந்நாடுகளுக்கு இடையே அணுசக்தி துறையில் முன்னணி வகிக்கும் அர்ஜெண்டினாவுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் புதிய அணு உலை அமைப்பதற்கு ரஷ்யாவின் அணுசக்திக் கழகம் உதவி செய்யும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதுகுறித்து அர்ஜெண்டினா அதிபர் கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் கூறுகையில், “லத்தீன் அமெரிக்க நாடுகளில் அணுசக்தித் துறையில் முன்னணி வகிக்கும் அர்ஜெண்டினாவுடன், ரஷ்யா செய்துள்ள இந்த ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.” “இரு நாடுகளுக்கிடையிலான உறவு இந்த ஒப்பந்தம் மூலம் வலுவடைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.