Home உலகம் உலகக் கிண்ணக் காற்பந்து : அர்ஜெண்டினா குரோஷியாவை வீழ்த்தி இறுதி ஆட்டத்தில் நுழைந்தது

உலகக் கிண்ணக் காற்பந்து : அர்ஜெண்டினா குரோஷியாவை வீழ்த்தி இறுதி ஆட்டத்தில் நுழைந்தது

401
0
SHARE
Ad

டோஹா : உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 13) நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் குரோஷியாவை வீழ்த்தி அர்ஜெண்டினா இறுதி ஆட்டத்தில் நுழைந்தது.

காற்பந்து  விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் உலகக் கிண்ணத்தை வெற்றி கொள்ளும் கனவோடு இருந்து வருகிறார் அர்ஜெண்டினா காற்பந்து குழுவின் முன்னணி விளையாட்டாளரும், குழுத் தலைவருமான லியோனல் மெஸ்ஸி. அந்தக் கனவை நோக்கி நகரும் விதத்தில் 3-0 கோல் எண்ணிக்கையில் குரோஷியாவை வீழ்த்தி இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா நுழைந்திருக்கிறது.

இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவுடன் மோதுகிறது. அதில் வெற்றி பெறும் குழுவை அர்ஜெண்டினா இறுதி ஆட்டத்தில் சந்திக்கும்.