Home இந்தியா திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி பேரணி – வைரமுத்து தொடங்கி வைத்தார்!

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி பேரணி – வைரமுத்து தொடங்கி வைத்தார்!

710
0
SHARE
Ad

vairamuthuகோவை, ஜீலை 14 – நேற்று காலை கோவை கொடிசியா அரங்கில் வெற்றித்தமிழர் பேரவை சார்பில் கவிஞர்கள் திருநாள், கலை இலக்கிய திருவிழா வெற்றிகரமாக நடைப்பெற்றது.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரியும், நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க கோரியும், அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்க கோரியும் தமிழ்நடை பேரணி தொடங்கியது.

இப்பேரணியை கோவை சிவானந்தா காலனியில் கவிஞர் வைரமுத்து தொடக்கி வைத்தார்.

#TamilSchoolmychoice

பேரணியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர், கவிஞர்கள், தமிழ்நடை பொறுப்பாளர், பள்ளி மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.