Home கலை உலகம் அஜீத்தை நேரில் பார்க்க ஆசை – நஸ்ரியா!

அஜீத்தை நேரில் பார்க்க ஆசை – நஸ்ரியா!

572
0
SHARE
Ad

ajith-nazriaசென்னை, ஜூலை 14 – அஜீத் என்னுடைய மனதிற்கு பிடித்த கதாநாயகன் என்று நஸ்ரியா தெரிவித்துள்ளார். அவருடன் நடிக்க முடியாவிட்டாலும் ஒருமுறையாவது நேரில் பார்த்து பேச ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

சமீபத்தில் விஜய் விருது விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சிறந்த அறிமுக நடிகை விருது பெற்றார் நஸ்ரியா. அவரிடம் பிடித்த கதாநாயகன் யார் என்று கேட்டதற்கு, அஜீத் என்று கூறினார்.

நஸ்ரியாவுக்கு, அஜீத்துடன் ஒரு படத்திலாவது டூயட் பாட வேண்டும் என்ற கனவு உள்ளதாம். அதற்காக, அவர் தீவிரமாக முயற்சித்து வந்துள்ளார். மலையாள நடிகர் பஹத் பாசிலுடன் நஸ்ரியா காதலில் விழுந்ததை அடுத்து, அவர்களின் திருமணமும் முடிவாகி விட்டது.

#TamilSchoolmychoice

nazriya1இதனால், அஜீத்துடன் நடிக்கும் நஸ்ரியாவின் கனவு நனவாகவில்லை. ஆனாலும், அஜீத்தை, ஒருமுறையாவது நேரில் சந்தித்து பேச வேண்டும் என, ஆசைப்படுகிறாராம் நஸ்ரியா.

இதனை விருது விழா மேடையிலும் தெரிவித்துள்ளார் நஸ்ரியா. ஒரு ரசிகையாக, அஜீத்துடன் மனம் விட்டு பேசும் நேரத்துக்காக காத்திருக்கிறார். இந்த ரசிகையின் ஆசையை நிறைவேற்றுவாரா அஜீத்.