போர்டலிசா, ஜூலை 16 – சர்வதேச அளவில் நிகழும் பயங்கரவாத சம்பவங்களை முற்றிலும் ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அது போன்ற பயங்கரவாத செயல்களை சகித்துக் கொண்டு இருக்க முடியவில்லை என்று நேற்று பிரேசிலில் நடந்த ப்ரிக்ஸ் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
மேலும், இந்த பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும், அது சமுதாயத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு கூட்டு நடவடிக்கை தேவை என்றும் மோடி குறிப்பிட்டார்.
இதனிடையே, ப்ரிக்ஸ் நாடுகளின் மேம்பாட்டிற்காக ஏற்படுத்தப்படவுள்ள வங்கியின் தலைமையிடத்தை, சீனாவின் ஷாங்காய் நகரில் அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே வேளையில், இந்த வங்கியில், ‘ப்ரிக்ஸ்’ உறுப்பு நாடுகள் அனைத்திற்கும் சமமான பங்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
படங்கள்: EPA