Home உலகம் ஆப்கன் வர்த்தகப் பகுதியில் தற்கொலைப் படை தாக்குதல் – 89 பேர் பலி! 

ஆப்கன் வர்த்தகப் பகுதியில் தற்கொலைப் படை தாக்குதல் – 89 பேர் பலி! 

549
0
SHARE
Ad

pak-bombகாபூல், ஜூலை 16 – ஆப்கானிஸ்தானில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்திகா மாகாணத்தின் ஆர்கன் மாவட்டத்தில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வர்த்தகப் பகுதியில் நேற்று தீவிரவாதிகள் வெடிகுண்டு நிரப்பிய காரை ஓட்டி வந்தனர்.

23-an-afghan-soafganபின்னர் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்தில், திடீரென வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தனர். தற்கொலைப்படை தீவிரவாதிகளின் இந்த எதிர்பாராத தாக்குதலின் காரணமாக அங்கு கூடி இருந்த ஏராளமானோர் பலியாகினர்.

#TamilSchoolmychoice

பலியானவர்களின் எண்ணிக்கை 80-ஐ தாண்டும் என தகவல்கள் வருகின்றனர். அதில் குழந்தைகளும், பெண்களும் அதிகம் என கூறப்பட்டது.

தகவல் கிடைத்தவுடன் ஆப்கன் காவல் துறையினரும், மீட்புப் படையினரும் அங்கு விரைந்து வந்தனர். மீட்கப்பட்டவர்களில் பலர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகின்றது.

4054Syriaஆப்கனில் ஜனநாயகத்தை எதிர்க்கும் தலிபான் அமைப்பு அங்கு தீவிரவாத செயல்களைச் செய்து வந்தாலும், இம்முறை அந்த அமைப்பு இந்த தாக்குதலை மறுத்துள்ளது. மேலும், வேறு எந்த அமைப்புகளும் இதுவரை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.