Home வாழ் நலம் சிறுநீரக கோளாறை போக்கும் சுரைக்காய்!

சிறுநீரக கோளாறை போக்கும் சுரைக்காய்!

1024
0
SHARE
Ad

first_agro_bottle_gourdஜூலை 16 – சுரைக்காய் என்றால் பலரும் இதில் என்ன சத்துகள் இருக்க போகிறது என்றே நினைத்து கொள்கிறார்கள். அப்படி நினைப்பவராக இருந்தால்  சுரைக்காயின் பயன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துகளை கொண்டுள்ளது. நீர்ச்த்து 96.07 %, இரும்புச்  சத்து 3.2%, தாது உப்பு 0.5 %, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.3%, கார்போஹைட்ரேட் 2.3% போன்ற சத்துகளை கொண்டுள்ளது சுரைக்காய்.
சிறுநீரக கோளாறுகளுக்கு: 

சுரைக்காயின் சதைப் பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சீறுநீரக  கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது.

#TamilSchoolmychoice

health-benefits-of-bottle-guard-1மலச்சிக்களை நீக்க:

அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும்  நாவறட்சியை போக்கும்.

கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைபகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும்.  உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.

நீரிழிவு நோய்: 

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாகம் ஏற்பட்டு உடல் எடையும் குறையும். இதை தவிர்க்க சுரைக்காயின் சதைப்பகுதியை  சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சாம்பாரிலிட்டு சாப்பிட்டு வந்தால் தாகம் அடங்கும். மேலும் நீரிழிவு உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி  வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

bottle-gourdதலைவலி நீங்க: 

வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.

உறக்கத்திற்கு: 

இரவில் சரியாக தூக்கம் வராமல் அவதிபடுபவர்கள் சுரைக்காயின் சாற்றுடன் நல்லெண்ணெய் கலந்து தலைமுடியில் தடவி மஜாஜ்  செய்து வர தூக்கம் கண்களை தழுவும்.

bottle gourdஆண்மை பெருகுவதற்கு: 

சுரைக்காய் மற்றும் அதன் விதைகளுக்கு ஆண்மையை பெருக்கும் சக்தி உண்டு. சுரைக்காயின் சதைப் பகுதியுடன்  விதைகளையும் சேர்த்து சர்க்கரையுடன் கலந்து ஒரு மாதம் உண்டு  வந்தால் பலன் கிடைக்கும்.

அசதியை போக்க: 

உடல் சோர்வு உள்ளவர்கள் சுரைக்காயை அன்றாடம் உணவில் எடுத்துக்கொண்டால் அசதி, சோர்வு நீக்கி விடும். நீர்சத்து அதிகம்  கொண்டிருப்பதால் கர்ப்பிணிபெண்கள் இதை சமைத்து சாப்பிட்டால் உடல் வீக்கம் குறையும். தேவையற்ற தண்ணீர் சிறுநீர் வழியாக வெளியேறும்.