Home வாழ் நலம் கண்களுக்கு பலத்தைக் கொடுக்கும் ஆட்டிறைச்சி!

கண்களுக்கு பலத்தைக் கொடுக்கும் ஆட்டிறைச்சி!

683
0
SHARE
Ad

fresh-cuts-goat-meatஜூலை 17 – மாமிச உணவிற்கும் சில மருத்துவக் குணங்கள் உண்டு. சிறப்பாக ஆட்டு மாமிசத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு.

உடலில் பல பகுதிகள் வாயுவை ஏற்படுத்தவும், அஜீரத்தை விளைவிக்கவும் கூடியவை என்பதால், சீரகம், மிளகு போன்ற பொருட்களைக் கலந்து இவற்றைச் சமைக்க வேண்டும்.
mutton,ஆட்டிறைச்சி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

ஆட்டின் தலை: இதயம் சம்பந்தமான நோயை நீக்கும். குடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். தலைவலியை போக்கும். கண்களுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். பார்வை துலங்கும்.

#TamilSchoolmychoice

ஆட்டின் மார்பக இறைச்சி: மார்புக்குப் பலத்தைக் கொடுக்கும். மார்பக புண்னை ஆற்றும்.

Kosha-Mangshoஆட்டின் இதயம்: தைரியம் உண்டாக்கும். மன ஆற்றலைப் பெருக்கும். இதயத்திற்குப் பலம் தரும். சூட்டை அகற்றும். தோலுக்குப் பசுமை தந்து பளபளப்பாக்கும்.

ஆட்டின் மூளை:  கண் குளிர்ச்சி பெறும். தாது விருத்தி உண்டாக்கும். புத்தி தெளிவடையும். நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை பாகத்திற்கு நல்ல பலத்தைத் தரும்.

mutton fryஆட்டுக் கொழுப்பு: உடலின் வெப்பத்தை ஆற்றிக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு மிகுந்த வலு தரும். இடுப்புப் பாகத்திற்கு நல்ல பலம் தரும். எவ்வித நோயையும் ஆற்றும்.

ஆட்டின் கால்கள்: இடுப்புக்கு பலம் தரும். இடுப்பு நோய் அகற்றும். தாது விருத்தியாகும். எலும்புக்குப் பலம் தரும். தைரியம் ஏற்படுத்தும். கால்களுக்கு ஆற்றல் தரும்.