Home வாழ் நலம் சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பை தடுக்கலாம்!

சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பை தடுக்கலாம்!

495
0
SHARE
Ad

chocolate-less-fatஜூலை 18 – உண்மையை வெளிப்படையாகச் சொல்வதென்றால், சிறுவர்களை மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்த விஷயம்தான் ‘சாக்லேட்’. ஆனால் குழந்தைகளையும் கூட ‘சாக்லேட் சாப்பிடாதே’ என்று நாம் கண்டிப்போம். இந்நிலையில், சாக்லேட் பற்றிய ஒரு ‘இனிப்பான’ செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள், விஞ்ஞானிகள்.

அதாவது, இதயம் காக்க இது துணை புரிகிறது என்கிறார்கள். அதிக அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் இதய நோயாளிகள் தினசரி சிறிது கறுப்பு சாக்லேட் வீதம் 10 ஆண்டுகளுக்குச் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பையும், பக்கவாதத்தையும் தடுக்கலாம்.

chocolateஇது நாம் கூறும் விஷயமல்ல, ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் கூறுவது. மெல்போர்ன் மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்த ஆய்வாளர்கள், அந்நாட்டைச் சேர்ந்த 2 ஆயிரத்து 13 பேரை ஆய்வுக்குப் பயன்படுத்திக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

ஆய்வின் முடிவில், 70 சதவீதம் அல்லது அதற்கு மேல் ‘கோகோ’ கலவை உள்ள சாக்லேட்டை தினசரி 100 கிராம் அளவுக்குச் சாப்பிடுவது, இதய அபாயத்தை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கும் என்கிறார்கள்.

chocolateஇதுதொடர்பாக முன்னணி ஆய்வாளரான எல்லா ஸோமர், உயிரைப் பறிக்கும் 70 இதய பாதிப்புகள், உயிரைப் பறிக்காத 15 இதய பாதிப்புகள், 10 ஆண்டுகளுக்கு மேலாக கறுப்பு சாக்லேட் சாப்பிடும் 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு முற்றிலுமாகத் தவிர்க்கப்படும் என்று கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறார்.

”தொடர்ந்து 10 ஆண்டுகாலம் தினசரி 100 கிராம் கறுப்பு சாக்லேட் சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய அனுகூலங்கள் ஏற்படக்கூடும் என்று நாங்கள் கணித்திருக்கிறோம்.

Chocolate-7அதிக ‘ரிஸ்க்’ உள்ள இதயவியாதிக்காரர்களுக்கு மருந்துரீதியான சிகிச்சையை விட ‘கறுப்பு சாக்லேட் தெரபி’ நல்ல பலனைக் கொடுக்கும் என்று எங்கள் ஆய்வு முடிவுகள் தெரியப்படுத்தியிருக்கின்றன” என்கிறார் ஸோமர். இந்த இனிப்பான சிசிச்சையை யார்தான் விரும்ப மாட்டார்கள்!