Home நாடு எம்எச்17 பேரிடர்: 43 மலேசியப் பயணிகளில் நஜிப்பின் பாட்டியும் ஒருவர்!

எம்எச்17 பேரிடர்: 43 மலேசியப் பயணிகளில் நஜிப்பின் பாட்டியும் ஒருவர்!

400
0
SHARE
Ad

o-MH17-PASSENGER-570பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18 – உக்ரைனில் விழுந்து நொறுங்கிய எம்எச்17 விமானத்தில், 43 மலேசியப் பயணிகளில், பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் பாட்டி புவான்ஸ்ரீ சிடி அமிராவும் ஒருவர் என ‘தி ஸ்டார்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தோனேசியா ஜோகார்த்தாவில் இருந்து மலேசியாவிற்கு அவர் திரும்பும் வழியில், ஆம்ஸ்டெர்டாம் நகரில் கோலாலம்பூருக்கான எம்எச்17 இணைப்பு விமானத்தை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நஜிப்பின் தாத்தாவான மறைந்த டான்ஸ்ரீ முகமட் நோ ஓமாரின் இரண்டாவது மனைவியான சிடி அமிராவுக்கு வயது 83 ஆகும்.

#TamilSchoolmychoice

இந்த தகவலை பிரதமரின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.