Home வணிகம்/தொழில் நுட்பம் 18, 000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்: அதிர்ச்சித் தகவல்!

18, 000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்: அதிர்ச்சித் தகவல்!

436
0
SHARE
Ad

Local-tech-firms-to-get-help-from-large-enterprisesஜூலை 18 – மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 18, 000 பேரை வேலையிலிருந்து அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் 2015-ஆம் ஆண்டுக்குள் தங்களது ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 18, 000 பேரை நீக்க முடிவு செய்துள்ள தகவல் தொழில்நுட்பத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

microsoft_4இந்நிலையில் அந்நிறுவனத்துக்கு சமீபத்தில் கைமாறிய நோக்கியா நிறுவனத்தில் பணிபுரியும் 12, 500 ஊழியர்களுக்கு வேலை நீக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாடெல்லா ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் உற்பத்தி மற்றும் அவசியத்தைக் கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

microsoft-software-1024x661மேலும், ஆறு மாதங்களில் படிப்படியாக இந்த ஊழியர்கள் தங்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.மைக்ராசாப்ட் நிறுவனத்தில் மாற்றம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நாடெல்லா கூறியிருக்கும் அதிர்ச்சித் தகவல் குறிப்பிடத்தக்கது.