Home நாடு எம்எச்17 பேரிடர்: பயணிகளுள் ஒருவர் எடுத்த காணொளி வெளியீடு!

எம்எச்17 பேரிடர்: பயணிகளுள் ஒருவர் எடுத்த காணொளி வெளியீடு!

505
0
SHARE
Ad

VIDEO MESSAGEகோலாலம்பூர், ஜூலை 18 – 298 பயணிகள் மற்றும் 15 விமானப் பணியாளர்களுடன் ஆம்ஸ்டெர்டோமில் இருந்து கோலாலம்பூர் நோக்கி புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்17, ரஷ்யா எல்லை அருகே ஏவுகணை மூலம் வீழ்த்தப்பட்டது.

இந்த பேரிடரில் 298 பயணிகளும் இறந்துவிட்டனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், விமானம் புறப்படுவதற்கு முன் அதில் பயணம் செய்த மலேசியாவைச் சேர்ந்த முகம்ட் அலி முகமட் சலிம் என்பவர், தனது செல்பேசியின் மூலம் விமானத்தின் உள்ளே சுமார் 14 விநாடிகள் படம் பிடித்து அதை இன்ஸ்டோகிராம் வசதியின் மூலம் இணையத்திலும் வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

தனது பதிவில், விமானப் பயணம் பதட்டத்தைத் தருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இவ்வாண்டு நோன்பு பெருநாளை தன் குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக தாய்நாடு திரும்புவதற்காக முகமட் அலி அவ்விமானத்தில் பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த காணொளியில் விமான பணியாளர் பேசுவதும், பயணிகள் பொருட்களை எடுத்துவைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.