Home வாழ் நலம் பாலுணர்ச்சியை அதிகரிக்கும் முட்டை!

பாலுணர்ச்சியை அதிகரிக்கும் முட்டை!

2968
0
SHARE
Ad

egg,ஜூலை 22 – உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனை உணவுப் பொருட்கள் இருந்தாலும், முட்டைக்கு இணையாது எதுவும் வர முடியாது. ஏனெனில் முட்டையில் அந்த அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது.

இத்தகைய சத்துக்கள் உடலின் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு தருகிறது. குறிப்பாக முட்டையில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், அமினோ ஆசிட்டுகள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் போன்றவை நிறைந்துள்ளது.

dash-eggsஅதுமட்டுமின்றி மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத கோலைன் என்ற சிறப்பான சத்துப் பொருள் முட்டையில் அடங்கியுள்ளது. எனவே முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

#TamilSchoolmychoice

அதிலும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவது இன்னும் சிறப்பானது. முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை காலை வேளையில் சாப்பிடக் கொடுத்தால், அவர்களின் வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

முட்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
eggsஇரத்த கொழுப்பை குறைக்கும்:

முட்டையில் எவ்வளவு தான் கொழுப்புச் சத்துக்கள் இருந்தாலும், அவை இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்காது. பொதுவாக கொழுப்பினால் உள்ள பொருட்களை டயட்டில் சேர்த்து, இரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும் என்று சொல்வது தவறு.

ஏனெனில் சாதாரணமாக நம் உடலில் உள்ள கல்லீரலானது அன்றாட கொழுப்பைக் அதிக அளவி உற்பத்தி செய்யும். எப்போது கொழுப்பு நிறைந்த முட்டையை அதிகம் எடுத்து வருகிறோமோ, அப்போது கல்லீரலானது கொழுப்பின் உற்பத்தியை குறைத்துவிடும். இதனால் இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

எடையை பராமரிக்கும்:

முட்டையில் எவ்வளவு தான் கொழுப்புச் சத்து இருந்தாலும், அவை உடல் எடை அதிகரிப்பதை தடுத்து, எடையைப் பராமரிக்கும்.

Eggs (1)கண் ஆரோக்கியம்:

முட்டையின் மஞ்சள் கருவில் லூடீன் மற்றும் ஜியாசாந்தின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் வளமாக நிறைந்திருப்பதால், அவை கருவிழியை பாதுகாத்து, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும். உடல் நல்ல கட்டமைப்புடன் இருக்க வேண்டுமானால் தினமும் முட்டையை சாப்பிட்டு வாருங்கள்.

ஆரோக்கியமான இதயம்:

கொழுப்பு அதிகம் நிறைந்துள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், அவை இதய நோய்க்கு வழிவகுக்கும். எனவே நிறைய மக்கள் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடமாட்டார்கள். ஆனால் முட்டையில் உள்ள கெட்ட கொழுப்பானது, இதய நோய்க்கு வழிவகுக்காது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

egggபாலுணர்ச்சியை அதிகரிக்கும்:

நிச்சயம் இந்த விஷயம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையிலேயே முட்டையை சாப்பிட்டால், பாலுணர்ச்சியனது அதிகரிக்கும். மேலும் மூளையானது மிகவும் ஆரோக்கியமாகவும், அதன் ஆற்றலும் அதிகரிக்கும்.

புற்றுநோயை தவிற்கும்:

முட்டையை தவறாமல் தினமும் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் ஆபத்தானது குறையும். மேலும், முட்டையை அன்றாடம் உட்கொண்டு வந்தால், எலும்புகளானது வலிமையுடன் இருக்கும்.