Home இந்தியா ராகுல் காந்திக்கு எதிராக 5 மாநிலங்களில் போர்க்கொடி! அதிர்ச்சியில் சோனியா காந்தி!

ராகுல் காந்திக்கு எதிராக 5 மாநிலங்களில் போர்க்கொடி! அதிர்ச்சியில் சோனியா காந்தி!

1011
0
SHARE
Ad

rahul-gandhiடெல்லி, ஜூலை 22 – காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், ஹரியானா மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் எழுந்துள்ள கலகக் குரலால் அக்கட்சி மேலிடம் கதி கலங்கிப் போயுள்ளது.

நாடாளுன்மன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர், காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும், மாநில முதல்வர்கள் மாற்றப்படுவார்கள், மாநில தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் மாதங்கள் உருண்டோடின. மாற்றங்கள் எதுவும் வந்தபாடில்லை.

இதனால் விரக்தியடைந்து போன காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தற்போது போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் பிருதிவிராஜ் சவானை எதிர்த்து தொழில் துறை அமைச்சர் நாராயண் ரானே நேற்று பதவியை ராஜினாமா செய்தார்.

#TamilSchoolmychoice

மேலும் “காங்கிரஸ் கட்சி மோசமான நிர்வாகத்தை கொடுத்துள்ளது. இதனால் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தோல்வியே கிடைக்கும்” என்று கூறி அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

அதேபோல் அஸ்ஸாம் மாநில மாநில காங்கிரசிலும் பஞ்சாயத்து வெடித்துள்ளது. அம்மாநில காங்கிரஸ் முதல்வர் தருண் கோகோயியை எதிர்த்து, கல்வித் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வசர்மா பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தமக்கு 32 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக கூறி மிரட்டி வருகிறார்.

மேற்கு வங்கத்தில் நேற்று காங்கிரசில் இருந்து 3 சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி முதல்வர் மம்தாபானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். இது காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் காங்கிரசில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்சிங் விலகியது அம்மாநில காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் பின்னடவாக கருதப்படுகிறது.

soniya gandiஹரியானா மாநிலத்தில் மாநில தலைவர் பிரிபேந்திரசிங் ஆளும் காங்கிரஸ் முதல்வர் புபீந்தர் சிங்குக்கு எதிராக வெளிப்படையாக போர்க் கொடி உயர்த்தியுள்ளார். புபீந்தர் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

பிரிபேந்திர சிங் எதிர்ப்பை முதலில் காங்கிரஸ் மேலிடம் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து பிரிபேந்திர சிங் தன் ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் சேரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

இப்படி மகாராஷ்டிரா. அஸ்ஸாம், ஹரியானா ஆகிய 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் முதல்வர்களுக்கு எதிராக எழுந்துள்ள திடீர் போர்க்கொடி போராட்டங்கள் சோனியாவை கடும் அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது.

காங்கிரசில் போர்க்கொடி தூக்கியுள்ளோரில் பெரும்பாலானோர் ராகுலைத்தான் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். ராகுலின் திறமையற்ற தலைமையால்தான் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாக கூறுகின்றனர்.

ஒட்டுமொத்தமாக 5 மாநில காங்கிரசிலும் இதே கருத்து எதிரொலித்துள்ளது. இது குறித்து சோனியா தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.