Home நாடு சிலாங்கூரின் அடுத்த மந்திரி பெசார் வான் அசிசா – பிகேஆர் தலைமை அறிவிப்பு!

சிலாங்கூரின் அடுத்த மந்திரி பெசார் வான் அசிசா – பிகேஆர் தலைமை அறிவிப்பு!

591
0
SHARE
Ad

anwar-wan-azizahசிலாங்கூர், ஜூலை 22 – சிலாங்கூரின் அடுத்த மந்திரி பெசாராக பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

நேற்று பின்னிரவு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பிகேஆர் ஆலோசகரும், அசிசாவின் கணவருமான அன்வார் இப்ராகிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பிகேஆர் கட்சியின் தலைமை குழுவுடனான கலந்துரையாடலுக்குப் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இந்த முடிவு பக்காத்தானின் கூட்டணி கட்சிகளான பாஸ் மற்றும் ஜசெக ஆகியவற்றால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும், ஆனால் சிலாங்கூரின் நடப்பு மந்திரி பெசாரான காலிட் இப்ராகிமின் தரப்பிலிருந்து இன்னும் அதற்கு பதில் வரவில்லை என்றும் அன்வார் தெரிவித்தார்.

இதனிடையே, பிகேஆர் கட்சியின் முடிவை ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்வதா? அல்லது கட்சியின் முடிவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதா என்று காலிட் இப்ராகிம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அவரது செயலாளர் அஸ்மான் அபிடின் கூறியுள்ளார்.

பிகேஆர் கட்சியின் இந்த அறிவிப்பிற்கு பக்காத்தானின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்று காலிட் காத்திருப்பதாகவும் அஸ்மான் தெரிவித்துள்ளார்.