Home இந்தியா இந்திய கிரிக்கெட் அணியால் பெருமிதம்: மோடி புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணியால் பெருமிதம்: மோடி புகழாரம்

511
0
SHARE
Ad

ashwin-dhoniடெல்லி, ஜூலை 22 – இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டர் வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர்,

“இந்திய அணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளித்தது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் சிறப்பான ஆட்டத்தினால் பெருமையடைகிறேன்” என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

2011-ம் ஆண்டுக்கு பிறகு அன்னிய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை ருசித்துள்ளது இந்திய அணி. கிரிக்கெட்டின் தாயகம் என்று வெள்ளைக்காரர்கள் வர்ணிக்கும், லாட்ஸ் மைதானத்தில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தை, இந்திய அணி வீழ்த்தியதும் சாதனையாகும். இதையே பிரதமர் வாழ்த்தியுள்ளார்.