Home அரசியல் ரிட்சுவானின் இனவாத விமர்சனம்!

ரிட்சுவானின் இனவாத விமர்சனம்!

779
0
SHARE
Ad

velpaariபெட்டாலிங் ஜெயா, பிப்.20- தைப்பூச திருவிழா குறித்து பெர்த்தஹானான் நேசனல் பல்கலைக்கழகத்து விரிவுரையாளர்  ரிட்சுவான்  எழுதி சினார் ஹரியான் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரை இனவாதமானது.

பத்துமலையில் தைப்பூசத்தன்று ஒரே நிறத்திலான கூட்டம் ஒன்று கூடுகிறார்கள்.ஒரு வாரத்திற்கு மேல் வாகன நெரிசல்கள் ஏற்படுத்துகிறார்கள். சிறு சிறு கோயில்களையெல்லாம் பெரிதாக்கியுள்ளனர் என்று அந்நாளிதழில் குறிப்பிட்டிருந்தார்.

இது போன்று இந்தியர்களின் நம்பிக்கையும் பெருநாட்களையும் அவமதிக்கும் வகையில் அவரின் செய்திக் காட்டுகிறது. இச்செய்தியானது இந்திய மக்களிடையே பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

 

வேள்பாரியின் கருத்து

ரிட்சுவானின் விவாகரம் தொடர்ந்து, நாளேட்டில்  எழுதிருப்பதை கண்டித்து மஇகா மத்திய செயலவை கொண்டு வரும் தீர் மானம்  அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மஇகா மத்திய செயலவை உறுப்பினர் எஸ். வேள்பாரிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு தகுந்த முடிவு காணவில்லையென்றால் மஇகா விட்டு வெளியேறுவேன். தொடர்ந்து, மலேசிய இந்தியர்கள் அனைவரும் வரும் பொது தேர்தலில் பக்காத்தான் அரசாங்கத்தை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்வேன் என்று மேலும் கூறினார்.

 

மலேசிய இந்து சங்கம்

அண்மைக் காலமாக இந்துக்களை இழிவுப்படுத்தும் வகையில் பலர் பேசி வருகின்றனர். அவ்வகையில் தற்போது ரிட்சுவான் லீ அப்துல்லா இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது குறித்து மலேசிய இந்து சங்கம் வன்மையாக கண்டிப்பதாக சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் கூறினார்.

மேலும், மலாய்க்காரர்கள் அதிகம் உள்ள பகுதியில் இந்திய முஸ்லிம் வேட்பாளர்களை 13ஆவது பொது தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று அவர் கூறியிருப்பது இனவாத பிரச்சனையை ஏற்படுத்தும் என்று சொன்னார்