தைப்பே, ஜூலை 24 – தைவான் நாட்டின் பெங்கு தீவு அருகே டிரான்ஸ் ஏசியா விமானம், விபத்திற்குள்ளானதில் அதில் பயணம் செய்த 58 பயணிகளில் 51 பேர் பலியாகியுள்ளதாகவும் 7 பேர் கடுமையான காயத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இறந்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படாததால், பலியானவர்களின் எண்ணிக்கையில் குழப்பமான சூழலே நிலவுகின்றது.
பெரும்பாலான இணைய ஊடகங்கள் 48 பேருக்கு மேல் பலியாகியிருக்கலாம் என தெரிவித்துள்ளன.
இந்நிலையில், விமானம் விழுந்து நொறுங்கிக் கிடக்கும் இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதனை கீழே காணலாம்:-
(குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கிக் கிடக்கும் காட்சி)
(தீவிர மீட்பு நடவடிக்கையில் மீட்புக்குழுவினர்)
(விமானம் விழுந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது வீட்டின் சுவர் சரிந்து விழுந்திருக்கும் காட்சி)
(விமானம் சிதறிக் கிடக்கும் பாகத்தில் எரியும் தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்)
(விமானத்தில் இருந்த பெண் பயணி ஒருவரை மீட்புக்குழுவினர் மீட்டுச் செல்லும் காட்சி)
படங்கள்: EPA