தைப்பே, ஜூலை 24 – தைவானின் பெங்கு தீவு அருகே 58 பயணிகளுடன் ஏடிஆர் -27 விமானம் விபத்திற்குள்ளானது குறித்து, டிரான்ஸ் ஏசியா விமான நிறுவனம், பயணிகளின் குடும்பத்திற்கு தங்களது வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த விமானத்தை செலுத்திய தலைமை விமானிக்கு 22 வருட அனுபவம் என்றும், துணை விமானிக்கு இரண்டரை ஆண்டுகள் அனுபவம் என்றும் டிரான்ஸ் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும், விமானத்தின் கறுப்புப் பெட்டி கிடைத்தவுடன் விமானத்தை இயக்கியது யார் என்று தெரியவரும் என்றும் அறிவித்துள்ளது.
இது குறித்து தைவான் நாட்டின் தலைவர் மா யிங் ஜியோ கூறுகையில், “தைவான் விமான போக்குவரத்து வரலாற்றில் இன்று மிகவும் சோகமான நாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன் கடந்த 2002 -ம் ஆண்டு தைவானில், பெங்கு தீவு அருகே சீன ஏர்லைன்ஸ் விமானம் விபத்திற்கு உள்ளானதில் 225 பயணிகள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.