Home கலை உலகம் 3 வாரத்தில் ‘அரிமா நம்பி’ 20 கோடி வசூல் சாதனை!

3 வாரத்தில் ‘அரிமா நம்பி’ 20 கோடி வசூல் சாதனை!

839
0
SHARE
Ad

Arima-Nambiசென்னை, ஜூலை 24 – விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்த ‘அரிமா நம்பி’ படம் கடந்த 4-ம் தேதி வெளியாகி 3–வது வாரமாக வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. கலைப்புலி தாணு தயாரித்துள்ள இப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார்.

தமிழகம் முழுவதும் முதலில் 400 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. பின்னர் ரசிகர்கள் வரவேற்பினால் 477 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

Arima-Nambi-featமலேசியா உட்பட சிங்கப்பூர்,  அமெரிக்கா, துபாய், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இந்த படம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

சென்னையில் முதல் வார வசூல் ரூ.4 கோடியை தாண்டியது. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் இரண்டு வாரத்தில் ரூ.11½ கோடி வசூலானது. பெரிய கதாநாயகர்களுக்கு இணையாக வசூல் சாதனை படைத்துள்ளது.

arima-nambi1இதுவரை ரூ.20 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தெலுங்கு, இந்தி மொழிகளில் இப்படத்தை ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் கலைப்புலி தாணுவே இவ்விரு மொழிகளிலும் ‘அரிமா நம்பி’ படத்தை ரீமேக் செய்கிறார். இதில் நடிக்க பெரிய கதாநாயகர்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.