Home இந்தியா தெலுங்கானாவில் பள்ளி பேருந்து மீது ரெயில் மோதியதில் 12 மாணவர்கள் பலி!

தெலுங்கானாவில் பள்ளி பேருந்து மீது ரெயில் மோதியதில் 12 மாணவர்கள் பலி!

581
0
SHARE
Ad

KENYA-TRAIN ACCIDENTமெடக், ஜூலை 24 – தெலுங்கானாவில் பள்ளி பேருந்து மீது ரெயில் மோதியதில் 12 மாணவர்கள் பலியாகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மெடக் மாவட்டம் மாசாய்பேட் கிராமம் அருகே ககாதியா பள்ளிக்கு, அந்த பகுதியை சேர்ந்த மாணவர்களை ஏற்றி பேருந்து ஒன்று சென்றது.

பேருந்து மாசாய்பேட்டை அருகே ஆளில்லா ரெயில்வே கேட்டை கடந்ததுள்ளது. அப்போது அவ்வழியாக வந்த தோப்ரான் – நிஜாம்பாத் பயணிகள் ரெயில்ம் பேருந்து மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

#TamilSchoolmychoice

imageஇந்த விபத்தில் 12 பள்ளி மாணவர்கள் பலியாகினர். பேருந்து ஓட்டுநரும் பலியாகினார். மேலும், சில மாணவர்கள் காயமடைந்துள்ளனர். சம்பவம் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் போலீசார் காயமடைந்த மாணவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்த மாணவர்களுக்கு ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப் படை மற்றும் தெலுங்கானா அமைச்சர் ஹரிஷ் ராவ் விரைந்துள்ளனர்.