Home இந்தியா ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி மாற்றம்? காரணம் என்ன?

ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி மாற்றம்? காரணம் என்ன?

517
0
SHARE
Ad

புதுடில்லி : இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் ராஜஸ்தான் மாநிலத்திற்கான வாக்களிப்பு நாள் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த மாற்றத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கடந்த 9ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோராம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி நவம்பர் மாதம் 23ம் தேதி ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்  ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 25-ஆம் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்தத் தேதியை மாற்றியதற்கான காரணம், நவம்பர் 23 தேதி  முகூர்த்த தினமாக இருப்பதால், ஏராளமான திருமணங்கள் அன்று நடக்கலாம் – இதனால் மக்கள் வாக்களிப்பதற்கு இடையூறுகள் இருக்கலாம் – என ஊடகங்கள் தெரிவித்தன.

இந்திய அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இந்த மாற்றத்தை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மிசோராம் நவம்பர் 7 – மத்திய பிரதேசம் நவம்பர் 17 – சட்டீஸ்கர் நவம்பர் 7 மற்றும் 17 என இரண்டு கட்டங்கள் –  தெலுங்கானா நவம்பர் 30 -என மற்ற 4 மாநிலங்களில் வாக்களிப்பு நடைபெறும்.

இந்த எல்லா 5 மாநிலங்களிலும் டிசம்பர் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்பாக நடைபெறும் இறுதி சட்டமன்றத் தேர்தல்கள் என்பதால் இந்த 5 மாநிலத் தேர்தல்களில் முடிவுகள் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகின்றன.