Home One Line P2 கொவிட்19 பாதிப்பால் பாதியிலேயே திரையரங்கில் நிறுத்தப்பட்ட ‘அசுரகுரு’ இணையத்தில் வெளியாகிறது

கொவிட்19 பாதிப்பால் பாதியிலேயே திரையரங்கில் நிறுத்தப்பட்ட ‘அசுரகுரு’ இணையத்தில் வெளியாகிறது

723
0
SHARE
Ad

சென்னை: நடிகர் விக்ரம் பிரபு நடித்து வெளியான அசுர குரு திரைப்படம் மீீண்டும் இணையத்தில் வெளியிடப்பட உள்ளது.

இத்திரைப்படம் திரையரங்கில் வெளியான சில நாட்களிலேயே கொவிட்19 பாதிப்புக் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால், படம் சில நாட்கள் மட்டுமே திரையரங்கில் ஓடும் நிலை ஏற்பட்டது.

ராஜதீப் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை அப்படம் பெற்றது. அடிதடி மற்றும் திகில் நிறந்த படமாக இது உருவானது. இத்திரைப்படத்தில் மஹிமா நம்பியார், யோகி பாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

#TamilSchoolmychoice

தற்போது இந்த படம் OTT எனப்படும் கட்டண இணையத் தளத்தில் வெளியாக உள்ளது. இந்த தகவலை பிரபல மக்கள் தொடர்பு அதிகாரி டைமண்ட் பாபு அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.