Home One Line P2 கொவிட்19: அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா நான்காவது இடம்

கொவிட்19: அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா நான்காவது இடம்

607
0
SHARE
Ad

புது டில்லி: அனைத்துலக அளவில் கொவிட்19 பாதிப்புக்குள்ளான நாடுகளில் இந்தியா நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. முன்னதாக, நேற்று அது ஐந்தாவது இடத்தில் இருந்தது.

தற்போதைய நிலவரப்படி 293,754 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக பிரிட்டன் 291,588 தொற்று நோயாளிகளைக் கொண்டு நான்காவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இந்தியா, அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்த நிலையில் உள்ளது. ரஷ்யாவில் தற்போது 4.93 இலட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இந்த எண்ணிக்கையானது 7.72 இலட்சமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

அமெரிக்காவில் அதிகபட்சமாக 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 18 நாட்களில் இந்தியா 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது அனைவரிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.