Home கலை உலகம் ஆஸ்ட்ரோ வாராந்திர சிறப்பு நிகழ்ச்சிகள் – கண்ணோட்டம்

ஆஸ்ட்ரோ வாராந்திர சிறப்பு நிகழ்ச்சிகள் – கண்ணோட்டம்

646
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்வரும் வாரத்தில் ஆஸ்ட்ரோவின் அலைவரிசைகளில் ஒளியேறவிருக்கும் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் சிலவற்றின் சிறப்பம்சங்கள் :

திங்கள், 15 ஜூன்

அண்ணாமலை (அலைவரிசை முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

ரஜினி70 எச்டி (அலைவரிசை 100), பிற்பகல் 3.00 மணி

#TamilSchoolmychoice

நடிகர்கள்: ரஜினிகாந்த், சரத் பாபு & குஷ்பூ

ஒரு பிரச்சனையால் பிரிக்கப்பட்ட நட்பு பல தசாப்தங்களாகியும் அந்தப் பிரிவு தொடர்கிறது.

வியாழன், 18 ஜூன்

ஜவ்வானி ஜானேமான் (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சைஃப் அலி கான், அலயா ஃபர்னிச்சர்வாலா & தபு

தனக்கு ஒரு மகள் மற்றும் பேரக்குழந்தை இருப்பதை அறிந்தபின் 40 வயது பிளேபாயின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது.

வெள்ளி, 19 ஜூன்

நான் சிரித்தால் (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஹிப்ஹாப் தமிழா ஆதி & ஐஸ்வர்யா மேனன்

காந்தி Pseudobulbar-ஆல் அவதிப்படும் ஒரு ஐ.டி (IT) பையன். அவர் மன அழுத்தத்தினால் கட்டுப்பாடில்லாமல் சிரிப்பார். எனவே, அவர் ஒரு சிவன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வலிமையான புனித ஆபரணத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறார். ஆனால் அந்த ஆபரணத்தைப் பிரிந்தால் அதுவே அவருக்கு அச்சுறுத்தலாக முடியும்.

சனி, 20 ஜூன்

பெக்காபு (Beqabu) (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), 10pm | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: சஞ்ஜய் கபூர் & மம்தா குல்கர்னி

ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த ராஜா வீதியில் வளர்க்கப்பட்டார். நண்பர், டி.பி. மற்றும் பாதுகாவலர், தாது ஆகியோருடன் தனிமையில் வாழ்ந்தார். தாது அவரை வளர்த்ததோடு மற்றவரை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் வித்தையையும் கற்பித்தார்.

நக்கீரன் – சாகப் போறேன் (புதிய அத்தியாயம் – 5)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

மலேசியர்களிடையே ஏற்படும் மனச்சோர்வு (depression) பற்றிய ஆழமான கலந்துரையாடல்.

தி மேகிங் ஓவ் நீயும் நானும் (The making of Neeyum Naanum) (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை  201), இரவு 7.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

பால கணபதி வில்லியம் மற்றும் சங்கீதா ஆகியோரின் இனிமையான நினைவுகள், போராட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த ஓர் அற்புதமான நேர்காணல்.

பாட்ஷா (அலைவரிசை முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

ரஜினி70 எச்டி (அலைவரிசை 100), இரவு 9.00 மணி

நடிகர்கள்: ரஜினிகாந்த், நக்மா & ரகுவரன்

ஒரு ஆட்டோ ஓட்டுநர், மாணிக்கம், தனது தந்தைக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக தனது இருண்ட கடந்த கால உலகத்தை மறைக்கத் தீவிரமாக முயற்சி செய்கிறார்.

ஞாயிறு, 21 ஜூன்

கபூர் & சன்ஸ் (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்) தந்தையர் தின சிறப்பு நிகழ்ச்சி

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), 10pm  | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ரிஷி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா, ரத்னா பதக் ஷா, ரஜத் கபூர், ஆலியா பட் & ஃபவாத் கான்

செயல்படாத குடும்பத்தின் 2 சகோதரர்கள்  தங்கள் குடும்பத்தினரை சந்திக்கின்றனர். அப்போது, தங்கள்  பெற்றோரின் திருமணம் சரிவின் விளிம்பில் இருப்பதைக் கண்டறிவதோடு, குடும்பம் நிதி நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதையும் அறிகின்றனர்.

குற்றம் குற்றமே – பாலியல் பலாத்காரம் (புதிய அத்தியாயம் – 6)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

லீனா, ஓர் இளம் பெண். இணையத்தில் சந்தித்த சதீஷுடன் நெருங்கியபோது காதலில் விழுகிறாள். மோசமான நோக்கங்கள் இருந்ததால்  சதீஷ் லீனாவுடன் நேர்மையாக பழகவில்லை. அவர்கள் சந்திக்கத் திட்டமிட்டபோது அன்று லீனாவின் பிறந்தநாள். எனவே, ஒரு தங்கும் விடுதியில் சந்திக்க லீனாவை ஒப்புக்கொள்ளச் செய்கிறான் சதீஷ். குறிப்பிட்ட தங்கும் விடுதியில் மேலாளராக பணிபுரிவதாகக் கூறினான். லீனா பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். காவல் துறையில் புகார் செய்யப்படுகிறது. காவலராக பணிபுரியும் சதீஷ் கைது செய்யப்படுகிறான்.

தர்பார் (அலைவரிசை முதல் ஒளிபரப்பு – பிரிமியர்) தந்தையர் தின சிறப்பு நிகழ்ச்சி

ரஜினி70 எச்டி (அலைவரிசை 100), இரவு 9.00 மணி

நடிகர்கள்: ரஜினிகாந்த், நயன்தாரா & நிவேதா தோமஸ்

மும்பை காவல்துறை ஆணையர் ஆதித்யா, போதைப்பொருள் கடத்தல்காரரான அஜயை பிடிக்கப் புறப்படுகிறார். அவ்வேளையில், ஓர் அனைத்துலக போதைப்பொருள் பிரபுவுடன் ஓர் ஆழமான சர்ச்சையை அவர் வெளிப்படுத்துகிறார். நீதியை நிலை நாட்ட வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகிறார்.