ஈப்போ: மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது வருகிற ஜூன் 24-ஆம் தேதி பேராக் மாநிலத்தில் திறக்கப்பட இருக்கும் 250 இடைநிலைப் பள்ளிகளில் 34,150 மாணவர்கள் சம்பந்தப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி, மனித மூலதன மேம்பாடு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் சொசைட்டி ஆகியவற்றின் தலைவர் ராஸ்மான் சாகாரியா கூறுகையில், அவர்களில் 28, 213 பேர் எஸ்பிஎம் தேர்வு எழுத இருப்பவர்கள் என்றும் 3847 பேர் ஆறாம் படிவ மாணவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
” இவர்களை தவிர்த்து 456 மாணவர்கள் எஸ்டிஏம் மற்றும் 1,034 மாணவர்கள் எஸ்விஎம் தேர்வில் அமர இருப்பவர்கள்.” என்று அவர் கூறினார்
மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையை சரியாக கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.