Home One Line P2 ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

1201
0
SHARE
Ad

சென்னை: ‘கும்கி’ திரைப்படப் புகழ் நடிகர் விக்ரம் பிரபு சமீபக்காலமாக நடித்து வந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்பதே உண்மை.   

இதற்கிடையில்பிரபல இயக்குனர் மணிரத்னம் தயாரித்துள்ள வானம் கொட்டட்டும்’ எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ளார். மணிரத்னத்தின் உதவி இயக்குனரான தனசேகரன் இந்தப் படத்தினை இயக்க உள்ளார்.

இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், மற்றும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இத்திரைப்படம் மூலமாக தமிழ் திரைப்பட உலகில் இவருக்கு மீண்டும் வாய்ப்புகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறதுஇத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி தற்போது வெளியாகி இரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: