Home கலை உலகம் மணிரத்னம் தயாரிக்கும் படத்திற்கு பாடகர் சித் ஶ்ரீராம் இசையமைப்பாளர்!

மணிரத்னம் தயாரிக்கும் படத்திற்கு பாடகர் சித் ஶ்ரீராம் இசையமைப்பாளர்!

1343
0
SHARE
Ad

சென்னை: இன்றையக் காலக்கட்டத்தில் இளம் இரசிகர்களை தனக்கான பாணி மற்றும் குரலால் தம் பக்கம் வசமாக்கி வைத்திருக்கும் பாடகர் சித் ஶ்ரீராம், இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில், உருவாக்கப்படவுள்ள வானம் கொட்டட்டும்’ படத்திற்கு முதல் முதலாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான மணிஸ் டாக்கிஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும்வானம் கொட்டட்டடும்படத்தின் படப்பிடிப்பு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டின் இவர்களுடன் சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

பின்னணி இசை பாடகராக இருந்த சித் ஸ்ரீராம் இந்த படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாவது அனைவரின் எதிர்பார்ப்பையும் மேலோங்கச் செய்துள்ளது.