Home நாடு ஓரினச் சேர்க்கை காணொளி: “சூத்திரதாரி யாரென்று எனக்கு தெரியும்!”- அஸ்மின்

ஓரினச் சேர்க்கை காணொளி: “சூத்திரதாரி யாரென்று எனக்கு தெரியும்!”- அஸ்மின்

1052
0
SHARE
Ad
Azmin Ali – file pic

கோலாலம்பூர்: ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரத்தில் தம்மை சம்பந்தப்படுத்தி பரப்பியதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யாரென்று தமக்குத் தெரியும் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விவகாரம் இன்னும் காவல் துறையினரின் விசாரணையில் இருப்பதால் அவர் அந்த நபரின் பெயரைக் கூற மறுத்துவிட்டார்.

ஆனால் முதல் காணொளி வெளியிடப்பட்டபோது இது உள்கட்சியினரின் சம்பந்தம் இருப்பதாக நான் நம்பினேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

ஓரினச் சேர்க்கை காணொளி வெளியிடப்பட்ட பிறகு பிகேஆர் கட்சிக்குள்  குழப்பம் ஏற்பட்டதோடில்லாமல் அக்கட்சியின் நற்பெயரை நாசம் செய்யும் செயலாகவும் இது அமைந்தது.

அக்காணொளியில் இருப்பது தாம்தான் என வெளிப்படையாக வாக்குமூலம் அளித்த ஹசிக் அப்துல்லாவை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வரும் வேளையில், ஹசிக்குடன் இருப்பது தாம் அல்ல என்று அஸ்மின் அலி மறுத்து வருகிறார்.