Home நாடு அம்னோ கிளை உறுப்பினர்கள் அறிவிலிகள் அல்ல!- சாஹிட்

அம்னோ கிளை உறுப்பினர்கள் அறிவிலிகள் அல்ல!- சாஹிட்

808
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சிதான் அறிவிலித்தனமாக செயல்படுகிறது என்று அம்னோதலைவர்டாக்டர்அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

நேற்று தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து பதிவிட்ட சாஹிட்,  ஜசெக பெர்சாத்து மற்றும் பக்காத்தான் ஹாராப்பானை பிளவுப்படுத்துவதாகக் கூறினார். ஜசெக அக்கட்சியை தங்களின் கைப்பாவையாக பயன்படுத்தி வருவதாகக் அவர் குற்றம் சாட்டினார்.

மகாதீர் எச்சரிக்கையாக இருப்பதும், தனது சொந்த கூட்டணியில் ஜசெகவினால் முட்டாளாக்கப்படுவதைத் தடுக்க முயற்சிப்பதும் சிறந்தது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

அண்மையில் மலேசியாகினியில் வெளியான செய்தியறிக்கையில், அம்னோவை மேற்கோள் காட்டி, அக்கட்சித் தலைவர்கள் சுயநலமாக இருந்து மற்றவர்களை மேலே வரவிடாமல் இருப்பதை பெர்சாத்து உறுப்பினர்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.

கிளை மட்டத்தில் உள்ளவர்களை அம்னோ தலைவர்கள் மேல் வருவதிலிருந்து தடுப்பதாக மகாதீர் கூறினார்.  இதற்கு பதிலளித்த சாஹிட் , கிளை மட்டத்தில் உள்ள அம்னோ தலைவர்கள் முட்டாள்கள் அல்ல, ஆனால் புத்திசாலித்தனமாக மதிப்பிடப்பட்டு பொறுமையாகவும் உண்மையுடனும் இருப்பதாகக் கூறினார்.