Home நாடு 24 மணி நேரத்திற்குள் சிலாங்கூரில் மீண்டும் நீர் தடை!

24 மணி நேரத்திற்குள் சிலாங்கூரில் மீண்டும் நீர் தடை!

758
0
SHARE
Ad

ஷா அலாம்: இன்று திங்கிட்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டம் 1, கட்டம் 2, கட்டம் 3 மற்றும் ரந்தாவ் பஞ்சாங் நீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியதாக சிலாங்கூர் நீர் விநியோக நிறுவனம் (சியாபாஸ்) அறிவித்தது.

சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலைய (எல்ஆர்ஏ) கட்டம் 1, 2, 3 மற்றும் எல்ஆர்ஏ ரந்தாவ் பஞ்சாங் ஆகியவற்றில் கண்டறியப்பட்ட டீசல் எண்ணெய்கள் தொடர்ந்து இந்நான்கு முக்கிய நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் மூடப்படப்பட்டதாக அது குறிப்பிட்டிருந்தது. ஏற்கனவே, ஒரு சில நாட்களாக கிள்ளான் மற்றும் அது சுற்றுப்பகுதிகளில் வாழும் மக்கள் பெரும்பாலானோர் நீர் தட்டுப்பாடு காரணமாக அவதியுற்று வருவது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

சியாபாஸ் தொடர்புக் குழுத் தலைவர் அப்துல் ராவூப் அகமட் கூறுகையில், நீர் நிலைகளை மீட்பதற்கும், குளத்தின் அளவை மேம்படுத்துவதற்கும், விநியோகத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கும் பணிகள் செயல்பாட்டில் உள்ளதாகக் கூறினார்.

பார வண்டிகள் மூலம் முன்னுரிமை கொடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முக்கியமாக நீர் உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த சம்பவம் பெரிய அளவில் இடையூறு விளைத்திருப்பதால், நீர் வண்டிகள் நீரை வழங்குவதில் தாமதத்தைத் தவிர்க்க உள்ளூர் சேவை மையங்கள் மற்றும் பொது குழாய்கள் வழி மக்கள் நீரைப் பெற்றுக் கொள்ளலாம்” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அமைப்புகளின் உதவியுடன் சியாபாஸ் உதவியை வழங்கவும், பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளும் மீட்கப்படுவதை துரிதப்படுத்தவும் கடுமையாக உழைத்து வருவதாக அவர் கூறினார்.