Home கலை உலகம் பிக்பாஸ் 3 : மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டார்

பிக்பாஸ் 3 : மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டார்

1610
0
SHARE
Ad

சென்னை – இந்த வாரமும் ஐவரை பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்ற மற்ற பங்கேற்பாளர்கள் பரிந்துரைத்திருந்தனர். மோகன் வைத்யா, சரவணன், மீரா, அபிராமி, சேரன் ஆகியோரே வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்ட அந்த ஐவராவர்.

இந்த வாரம் சனிக்கிழமை (ஜூலை 20) நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடிய கமல்ஹாசன், கடந்த வாரம் செய்ததைப் போல் யாரையும் காப்பாற்றவில்லை.

எனினும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) ஒளியேறிய நிகழ்ச்சியில் முதலில் கோமாளி வேடத்தில் இருந்த ஒருவரை உள்ளே அனுப்பினார் கமல்ஹாசன். அந்த மாயவித்தைக்காரர் சில வித்தைகளைச் செய்து காட்டிவிட்டு ஒரு பச்சை நிறப் பந்தை மீரா மிதூனின் கையில் வழங்கி விட்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து மீரா காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இரண்டாவதாகக் காப்பாற்றப்படுபவராக அபிராமியை அறிவித்தார் கமல்ஹாசன். மூன்றாவதாக சரவணனும் காப்பாற்றப்படுவதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.

இறுதியில் மோகன் வைத்யா அல்லது சேரன் இருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்ற நிலையில், அட்டையைக் காண்பித்த கமல்ஹாசன் அதில் மோகன் வைத்யா பெயர் இருந்ததையும் காண்பித்தார்.

பின்னர் வழக்கம்போல் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட மோகன் வைத்யா அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு, வெளியே வந்து மேடையில் கமல்ஹாசனைச் சந்தித்து உரையாடினார்.