Home இந்தியா ஒரு பக்கம் புறப்படத் தயாராகும் சந்திராயன் – இன்னொரு பக்கம் கவிழத் தயாராக இருக்கும் கர்நாடக...

ஒரு பக்கம் புறப்படத் தயாராகும் சந்திராயன் – இன்னொரு பக்கம் கவிழத் தயாராக இருக்கும் கர்நாடக அரசு

1092
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியாவின் தலைநகரை மையமாகக் கொண்ட டில்லி மாநிலத்தின் முதல்வராகப் பல தவணைகள் பணியாற்றி டில்லியின் உருமாற்றத்திற்குக் காரணமானவர் என வர்ணிக்கப்படும் ஷீலா தீக்‌ஷிட் (படம்) நேற்று சனிக்கிழமை (ஜூலை 20) காலமானார். அவரது நல்லுடல் இன்று இந்தியாவின் அனைத்துக் கட்சி தலைவர்களின் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட நிலையில் நாளை திங்கட்கிழமை (ஜூலை 22) இந்தியா முழுவதும் இரண்டும் சம்பவங்கள் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகின்றன.

முதலாவது சம்பவம் சந்திராயன் -2 விண்கலத்தின் சந்திரனை நோக்கியப் பயணம். தொழில் நுட்பம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட சந்திராயன் -2 விண்கலத்தின் புறப்பாடு நாளை நிகழும் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்து கர்நாடக மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நிகழும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா முழுமையிலும் அரசியல் பார்வையாளர்கள் நடப்பு முதல்வர் குமாரசாமியின், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த கூட்டணி அரசாங்கம் கவிழுமா இல்லையா என்ற கேள்வியுடன் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

 

 

Comments