Home உலகம் இஸ்ரேலின் செயல்பாடுகள் போர்குற்றத்திற்கு சமமானதாகும் – நவநீதம் பிள்ளை!

இஸ்ரேலின் செயல்பாடுகள் போர்குற்றத்திற்கு சமமானதாகும் – நவநீதம் பிள்ளை!

563
0
SHARE
Ad

navi-pillaiஜெனீவா, ஜூலை 24 – காசா பகுதியில் உலக நாடுகளின் கோரிக்கைகளையும் மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாடு போர்க் குற்றம் புரிந்ததற்கான குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும் என ஐ.நா. மனித உரிமைக் குழுவின் தலைவர் நவி பிள்ளை எச்சரித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசா நகர் மீதான இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை குறைந்தது 649 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா மீதான தாக்குதலை நிறுத்தும்படி பல உலக நாடுகள் வலியுறுத்தி வந்தாலும், இஸ்ரேல் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாக இல்லை.

#TamilSchoolmychoice

இது குறித்த அறிக்கை ஒன்றை ஜெனீவாவில் நடைபெற்ற அவசரக் கூட்டம் ஒன்றில் ஐ.நா. மனித உரிமைக் குழுவின் தலைவர் நவி பிள்ளை வெளியிட்டுள்ளார்.

Navi_Pillayஅந்த அறிக்கையில், “சர்வதேச விதிமுறைகளை மீறுவதால் இஸ்ரேல் போர்க் குற்றங்களைப் புரிவதற்கான வாய்ப்பு அதிகமாகி வருகின்றது. அதனால் அதற்கான பின்விளைவுகளை இஸ்ரேல் சந்திக்க நேரிடும்” என்று கூறியுள்ளார்.

எனினும், இது குறித்து மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ள இஸ்ரேல். ஐ.நா. மனித உரிமை ஆணையம் பாரபட்சமாகச் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி உள்ளது. மேலும், ஐ.நா.வின் எந்தவொரு விசாரணைக்கும் இஸ்ரேல் இணைந்து செயல்படாது என்றும்

அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி சமாதானப் பேச்சு வார்த்தைக்கு உதவும் விதமாக இன்று இஸ்ரேல் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.