Home Featured உலகம் ஈழத் தமிழர்களை பணயம் வைத்து உலக நாடுகள் விளையாடும் அரசியல் விளையாட்டு!

ஈழத் தமிழர்களை பணயம் வைத்து உலக நாடுகள் விளையாடும் அரசியல் விளையாட்டு!

889
0
SHARE
Ad

unflagசென்னை – சுதந்திரக் காற்று, சுயமரியாதையான வாழ்க்கை இதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்து மாண்டு போன ஈழத் தமிழர்களின் வாழ்க்கை இதுவரை இலங்கை அரசியலுக்கும், இந்திய அரசியலுக்கும் குறிப்பாக தமிழக அரசியலுக்கும் பெரிதும் பயன்பட்டது. ஈழ ஆதரவாளராக காட்டிக் கொண்டவர்கள் பலர் அதனால் பெரிய அளவில் பயன்பட்டு இருக்க, அது ஈழத் தமிழர்களுக்கு பயன்பட்டதா? என்பது கேள்விக்குறி தான். பல்லாயிரக்கணக்கான ஈழ உயிர்கள் மறைந்தாலும், அவர்களை வைத்து நடத்தப்படும் அரசியல் மட்டும் இன்றும் தொடர்கிறது.

இம்முறை அவர்களை வைத்து அரசியல் விளையாட்டை, மேற்குலக நாடுகள் விளையாடி உள்ளன. ஈழத் தமிழர்கள் விவகாரத்தில், இலங்கையின் மீது துளி அளவும் நம்பிக்கை இல்லை. இனப்படுகொலைகள் நடந்துள்ள இலங்கையில், அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என கடந்த ஆண்டு வரை உறுதியாக இருந்த அமெரிக்கா, சமீபத்தில் ஐநாவில் கொண்டு வந்துள்ள தீர்மானம், ஈழத் தமிழர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

rajapakshe1_1909876gஅந்த தீர்மானத்தில், “இலங்கை போரின்போது நடந்த குற்றங்கள் குறித்து அனைத்துலக நீதிபதிகள் அடங்கிய விசாரணை அமைப்பை இலங்கை அரசே உருவாக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

#TamilSchoolmychoice

அதாவது யார் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதோ அவர்களே தங்களை விசாரிப்பவர்களை நியமனம் செய்து கொள்ளலாம் என்பது அதன் முக்கிய அம்சம். ஆனால், இப்படி ஒரு தீர்மானத்தை கூட இலங்கை ஏற்றுக் கொள்ள மறுத்தது. அதற்கு பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகளும் துணை நின்றன.

அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, தாங்கள் கொண்டுவந்தது மிகக் கடுமையான தீர்மானம் என்றுJohn-Kerry-Maithripala-Sirisena ஒப்புக் கொண்டு, இலங்கையுடன் பல்வேறு ஆலோசனை நடத்தி, அனைத்துலக நீதிபதிகள் அடங்கிய விசாரணை அமைப்பு என்பதற்கு பதிலாக காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் அடங்கிய விசாரணை அமைப்பு என்பது போன்ற பல்வேறு திருத்தங்களை செய்ய, இலங்கையும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டது.

இதனையடுத்து, நேற்று நடைபெறுவதாக இருந்த அமெரிக்க வரைவு தீர்மானம் தொடர்பான கலந்தாய்வு  ஒருமனதாக ரத்து செய்யப்பட்டது. பெரும்பான்மையானவர்கள் எதிர்பார்த்தது போலவே, இந்த விவகாரத்தில் எந்தவொரு தொடர்பும் இல்லாதது போல், இந்தியா மௌனம் காத்து ஒதுங்கிக் கொண்டது.

Navanethem_pillayஎனினும், ஆரம்பம் முதலே இனப்படுகொலையை எதிர்த்துக் குரல் கொடுத்து வரும் ஐநா முன்னாள் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை, அமெரிக்கா தீர்மானம் குறித்துக் கூறுகையில், “இலங்கை தொடர்பாக ஐநாவில் சமரசங்கள் செய்யப்பட்ட தீர்மானமே வருகிறது” என்று கூறியுள்ளார். ஆனாலும், அவரின் குரல் உலக நாடுகளுக்கு இடையே எந்த அளவிற்கு ஓங்கி ஒலிக்கும் என்று தெரியவில்லை.

ஒட்டுமொத்தாகப் பார்க்கையில், இலங்கையில் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட விவகாரம் நீர்த்தும் போக இருக்கிறது என்கிற அச்சம் மேலோங்குவதாக பொது நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

-சுரேஷ்