Home உலகம் இபோலா கிருமி தாக்கி பயணி மரணம்! ஏஸ்கை ஏர்லைன்ஸ் சேவைகள் இரத்து!

இபோலா கிருமி தாக்கி பயணி மரணம்! ஏஸ்கை ஏர்லைன்ஸ் சேவைகள் இரத்து!

610
0
SHARE
Ad

Askyலாகோஸ்,ஜூலை 30- இபோலா கிருமி தாக்கப்பட்ட பயணி ஒருவர் ஏஸ்கை ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நாட்டினுள் வந்ததற்காக நைஜீரியா அரசாங்கம் அனைத்து ஏஸ்கை ஏர்லைன்ஸ் விமான சேவைகளையும் இரத்து செய்துள்ளது.

கடந்து வாரம் இபோலா கிருமி தாக்கப்பட்ட ஒரு லைபீரிய குடிமகன் ஒருவர் லாகோஸிற்கு  ஏஸ்கை ஏர்லைன்ஸ் விமானத்தின் வழியாக வந்தடைந்தார். ஆனால் அவர் கிருமி தாக்குதல் காரணமாக நோய்வாய்பட்டு மரணமடைந்தார்.

இதன் காரணமாக,  நைஜீரியா அரசாங்கம் அனைத்து ஏஸ்கை ஏர்லைன்ஸ் விமான சேவைகளையும் இரத்து செய்துள்ளது. நைஜீரிய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் பெனடிக் அடெயிலேகா அரசாங்கத்தின் இந்த முடிவை அறிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர், “மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் ஒழுங்குமுறை ஆணையம், தற்போது ஆப்பிரிக்காவின் சில பகுதி மக்களை தாக்கிக்கொண்டிருக்கும் ஈபோல கிருமியின் தாக்கத்திலிருந்து நைஜீரிய மக்களைப் பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

“இச்சம்பவம் தொடர்பாக ஏஸ்கை ஏர்லைன்ஸ் விமானத்தின் பொறுப்பாளர்கள் விளக்கம் அழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். ஆனால் அவர்கள் இது தொடர்பாக எந்த ஒரு உறுதியான அல்லது கணிசமான பதிலையும் சான்றிதலையும் கொடுக்கவில்லை. மேலும் இந்த விமான நிறுவனத்தின் மேலாளர் இபோலா கிருமி பாதிக்கப்பட்ட ஒருவர் நைஜீரியாவுக்குள் நுழைய இந்த விமான சேவையைப் பயன்படுத்துக் கூடிய சாத்தியம் எவ்வாறு ஏற்பட்டது என்பதன் காரணத்தையும் இன்னும் கூறவில்லை. அதுமட்டுமல்லாமல் இனிமேல் இதை தடுப்பதற்கான வழிமுறைகளையும் அவர் கூறவில்லை”என்று பெனடிக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முகமையாளர், ஏஸ்கை விமான நிறுவனத்திற்கு ஒரு விசாரணை கடிதம் எழுத வேண்டும் என்றும் பெனடிக் கூறினார்.

விமான போக்குவரத்து ஆணையம், நைஜீரியவில் இயங்கி வரும் பிற ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்குப் பயணிகளின் பரிசோதனையின் போது மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்படவுள்ளது.