Home இந்தியா காமன்வெல்த் விளையாட்டு: தங்கம் வென்ற தமிழக வீரருக்கு 50 இலட்சம் பரிசு! வைகோவும் பாராட்டு!

காமன்வெல்த் விளையாட்டு: தங்கம் வென்ற தமிழக வீரருக்கு 50 இலட்சம் பரிசு! வைகோவும் பாராட்டு!

560
0
SHARE
Ad

comanwelthசென்னை, ஜூலை 30 – காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு, தமிழக அரசு 50 இலட்சம் பரிசு வழங்கியுள்ளது. இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை வைகோ வெளியிட்ட அறிக்கை கூறியுள்ளதாவது, “காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று தமிழக வீரர் சதீஷ்குமார் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்.

sathish-sivalingamபளு தூக்கும் பிரிவில் புதிய சாதனையும் படைத்துள்ளார். மேலும், அவர் பல வெற்றிகளைக் குவித்திட மதிமுக சார்பிலும், தமிழர்கள் சார்பிலும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice