Home இந்தியா ஜெயலலிதா, மோடி குறித்த சர்ச்சைக்குரிய இலங்கை அரசின் இணையத்தள கட்டுரை நீக்கம்!

ஜெயலலிதா, மோடி குறித்த சர்ச்சைக்குரிய இலங்கை அரசின் இணையத்தள கட்டுரை நீக்கம்!

612
0
SHARE
Ad

jayalalithaa vs modiகொழும்பு, ஆகஸ்ட் 1 –  இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கட்டுரை நீக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை பற்றி பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதுவதை கொச்சைப்படுத்தும் விதமாக தரக்குறைவாக விமர்சித்து, இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் அதில் ஜெயலலிதா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இருக்கும் சர்ச்சைக்குரிய படம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது. இந்த கட்டுரையின் தலைப்பில் ஜெயலலிதா குறித்து இடம்பெற்ற வாசகம் கடும் கண்டனங்கள் எழுந்தன.

#TamilSchoolmychoice

modi_jayaஇந்நிலையில் இதற்கு தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இப்பிரச்சனை இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதனைத் தொடர்ந்து இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் இடம்பெற்ற அந்த சர்ச்சைக்குரிய கட்டுரை நீக்கப்பட்டுள்ளது.