ஹேக் (நெதர்லாந்து), ஆகஸ்ட் 1 – சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச் 17 விமானம் தொடர்பிலான விவகாரங்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் உயர்மட்டக் குழுவினருடன் தற்போது நெதர்லாந்து சென்றுள்ளார்.
அவருடன் மஇகா தேசியத் துணைத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியமும் உடன் சென்றுள்ளார்.
எம்எச் 17 விமானப் பேரிடரில் உயிரிழந்த 43 மலேசியப் பயணிகளின் சடலங்களை மலேசியாவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபடுவது பிரதமரின் பயணத்தின் முக்கியக் குறிக்கோளாகும்.
பிரதமரின் வருகையின்போது பல்வேறு நிகழ்வுகளின் படக் காட்சிகள்:-
நேற்று ஹேக் நகரில் உள்ள நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் தனது அனுதாபங்களைக் கையெழுத்திட்டு தெரிவித்துக் கொண்ட நஜிப்பிற்கு நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் கைகொடுத்து ஆறுதல் கூறுகின்றார்.
எம்எச் 17 விமானப் பேரிடரில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெறும் பகுதியில் வைக்கப்பட்டுள்ள மலர் வளையக் குவியலில் நேற்று மலர் வளையம் வைத்த பின்னர், மௌன அஞ்சலி செலுத்தும் நஜிப்பும் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோரும். நஜிப்பின் வலது புறம் சுகாதார அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம்.
நெதர்லாந்தின் ஹில்வர்சம் நகரில் எம்எச் 17 விமானப் பேரிடரில் உயிரிழந்த பயணிகளின் சடலங்கள் அடையாளம் காணப்படும் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் நினைவஞ்சலி மலர் வளையங்களுக்கு மத்தியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் நஜிப்பும் அவரது துணைவியாரும்…
நெதர்லாந்தின் ஹேக் நகரில் நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று நஜிப்பை வரவேற்கும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்….
நெதர்லாந்தின் ஹேக் நகரிலுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் அனுதாப புத்தகத்தில் கையெழுத்திடும் பிரதமர்….
ஹேக் நகரில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டுடன் பேச்சு வார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னர் பிரதமர்… சுகாதார அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் நஜிப்பின் வலது புறத்தில் அமர்ந்திருக்கின்றார்.
படங்கள் : EPA